
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு வருகிற 21-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
ஆன்லைன் மூலம் நடைபெற்ற கலந்தாய்வில் 7 ஆசிரியர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் களாக பதவி உயர்வு பெற்றனர். அவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் வழங்கினார்.
இன்று (வியாழக்கிழமை) காலை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.