search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாண்டியராஜன்
    X
    அமைச்சர் பாண்டியராஜன்

    மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது- அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

    திமுக தலைவர் முக ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பான விவாதம் மற்றும் அது தொடர்பாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர்  மாபா பாண்டியராஜனை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     
    பின்னர் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை கைவிடும்படி  தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், அமைச்சர் பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், எதை புரிந்து கொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டிவிட்டது என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.

    இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் மாபா பாண்டியராஜன், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா, இல்லையா என்பது குறித்து 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பேன் என கூறி இருந்தார். 

    இது தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- முக ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை. மிசாவின்போது போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாத ஸ்டாலின் எதற்காக கைதானார் என்றே கேட்டேன். 
    ஸ்டாலின்.
    மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான விடையை அவர்கள் கொடுத்து விட்டனர். ஸ்டாலின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
    Next Story
    ×