search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    சேதராப்பட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்

    சேதராப்பட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டில் கனக வாகனங்கள் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் சேதராப்பட்டு - மயிலம் சாலை மற்றும் பத்துக்கண்ணு சாலையில் இருந்த வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் சேர்ந்து பெரும்பாலும் அகற்றி உள்ளனர். ஏற்கனவே பலர் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். ஒருசிலர் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து வரு கின்றனர்.

    இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பொதுமக்களும் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்றியவர்களும் போர் கொடி தூக்கி உள்ளனர். இதனால் சேதராப்பட்டு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

    இன்று காலை பொதுப்பணித்துறை இளநிலை பணியாளர் யூசுப் மற்றும் ஊழியர்கள் சேதராப்பட்டு- திருச்சிற்றம் பலம் கூட்டு ரோடு சாலையில் உள்ள தனியார் பார் அருகே இருந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து சேதராப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் ஏன் ஆக்கிமிப்பை அகற்ற வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு வில்லியனூர் தாசில்தார் மகாதேவன் வருவதாக தகவல் வந்தது. ஆனால் அவர் வரவில்லை.

    மேலும் ஆக்கிரமிப்பாளர் கள் அதிகாரிகளுடன் மிரட்டல் போக்குடன் செயல்பட்டனர். இதனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்தனர். பின்னர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×