search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோவில் சமையலறையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    கோவை அருகே கோவில் சமையலறையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன்.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (50) தொழிலாளி.இவர் பொள்ளாச்சியில் உள்ள அர்த்தனாரி பாளையம் பெருமாள் கோவிலுக்கு 5 வருடங்களாக வந்து 2 அல்லது 3 மாதங்கள் தங்கிக் கொள்வார்.

    இதேபோல் நேற்றும் கோவிலுக்குவந்து தங்கினார்.பின்னர் சண்முகநாதன் கோவில் பூசாரியை செல்போனில் அழைத்து தான் வீட்டுக்கு செல்வதாக கூறினார். இதையடுத்து கோவிலுக்கு பூசாரி வழக்கம்போல் வந்தார். அப்போது கோவில் சமையலறையில் சண்முகநாதன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பூசாரி ஆழியார் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரட்டிகாந்தர் தாஸ் (19). இவர் தனது தந்தை சுதாகர் தாஸ் உடன் கோவை பீளமேட்டில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ரட்டி காந்தர் தாஸின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டம் பொள் ளாச்சி கோமங்கலத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம்(34). சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு திடீரென தலையை வேகமாக அசைத் தது. இதில் எதிர்பாராத விதமாக தர்மலிங்கத்தின் முகத்தில் மாட்டின் கொம்பு பட்டு பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×