search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    முல்லை பெரியாறு அணைப்பகுதியில் நேற்று லேசான மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக கனமழை பெய்தது. மலைப்பகுதியில் நீர்வரத்து இடங்களில் பெய்த மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் நீர்வரத்து குறைவாக காணப்பட்டது. இதனிடையே முல்லை பெரியாறு அணைப்பகுதியில் நேற்று லேசான மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    அணையின் நீர்மட்டம் 126.65 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று நீர்வரத்து 1262கனஅடியாக இருந்தது. இன்று 400 கனஅடி அதிகரித்து 1637கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1520 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது. அணையில் 3974 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    வைகை அணை நீர்மட்டம் 61.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1565கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 3690 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் 3907 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 54.80 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 76 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் 431.2 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.44 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 78 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் 100.27 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    மாவட்டத்தில் சண்முகநதி பகுதியில் 1 மி.மீ மழை பெய்துள்ளது.

    Next Story
    ×