
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அலாரம் அடித்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நிலையத்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்த பயணிகள் உடனடியாக வெளியேறும்படி அறிவிப்பும் வெளியானது.
சென்ட்ரலில் இருந்து எழும்பூர், அண்ணா நகர், கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லக்கூடிய மெட்ரோ ரெயில் புறப்படக் கூடிய நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அலாரம் அடித்ததால் பயணிகள் பதட்டத்துடன் வெளியேறினர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் கூறுகையில், “தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. மெட்ரோ ரெயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்படவில்லை. அதனால் அடுத்த பிளாட் பாரத்தில் இருந்து ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றனர்.