search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு பழ மார்கெட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள்
    X
    கோயம்பேடு பழ மார்கெட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள்

    ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த 10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்

    கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் தெளித்து பழுக்க வைத்த 10 டன் வாழைப்பழங்களை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
    போரூர்:

    கோயம்பேடு பழ மார்க்கெட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாழைப்பழ மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இங்கு செயற்கை முறையில் எத்திலின் ரசாயனம் ஸ்பிரே தெளித்து பழங்கள் பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் சதாசிவம், ராமராஜ், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோயம்பேடு பழ மார்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    சுமார் 4 மணி நேரம் 34 வாழைப்பழ கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை நடந்தது. இதில் 3 குடோன்களில் நேரடியாக “எத்திலின் ரசாயன ஸ்பிரே” தெளித்து வாழைப்பழங்களை பழுக்க வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக 10 டன் எடை கொண்ட ரசாயன வாழைப்பழ தார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம்.

    சோதனை நடத்திய அதிகாரிகள்

    மேலும் பழங்களை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் சிகப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவை மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டது .

    ரசாயனம் மூலம் வாழைப்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்த 3 கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறும்போது, “லைசென்ஸ் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வரும் பழக்கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சோதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும்” என்றனர்.

    Next Story
    ×