search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் துரைக்கண்ணு
    X
    அமைச்சர் துரைக்கண்ணு

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்- அமைச்சர் துரைக்கண்ணு அறிக்கை

    தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான துரைக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சி மேயர், மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகரசபை தலைவர், நகரசபை வார்டு உறுப்பினர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட அனுமதி கோரும் விருப்ப மனுக்களை அளிக்க தஞ்சை வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது.

    தலைமைக்கழக அறிவிப்பின்படி தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் அனுமதி கோரும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருப்ப மனுக்கள் வருகிற வெள்ளிக்கிழமை(15-ந் தேதி) மற்றும் சனிக்கிழமை(16-ந் தேதி) கும்பகோணம் -சுவாமிமலை ரோட்டில் உள்ள ஸ்ரீகுருராகவேந்திரா திருமண மண்டபத்தில் பெறப்பட உள்ளது. இந்த இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய தொகை செலுத்தி விண்ணப்ப படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

    மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரம், மாநராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், நகரசபை தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரம், நகரசபை வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.2500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1500, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.3 ஆயிரம் ஆகிய தொகை தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    தேவையான பதவிகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள தொகையினை செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×