search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    500 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது எங்கே? போலீசார் விசாரணை

    மண்டபம் கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது எங்கே என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. உளவுத்துறையின் உதவியோடு தனிப்படை போலீசார் சந்தேகப்படும் நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

    மேலும் கூடுதலாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிமுகப்படுத்திய பிரத்யேக கைபேசி எண்ணான 9489919722-ல் பல தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.

    அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் மண்டபம் போலீஸ் நிலைய எல்கைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது, மண்டபம் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 201 இருந்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது சித்திரை குமார், மகன் முரளிதரன் (எ) அருண் (வயது24), என்பதும், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் ‘உள்ள அகதிகள் முகாமில் தங்கி வந்தவர் எனவும் தெரிய வந்தது.

    இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகள், திருப்பூர் மாவட்டத்தில் அச்சடிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. இது குறித்து மண்டபம் போலீசார் விசாரணை செய்து இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×