
நாகர்கோவில்:
நாகர்கோவில் சைமன் நகர், பூங்காநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். சென்னையில் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெனட் கமலம். இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் அவர்கள் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.
இதுபற்றி வீட்டு வேலைக்காரர் நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அங்கிருந்த பொருட்கள் கொள் ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவில்லை. சென்னையில் இருக்கும் விஸ்வநாதன் ஊர் திரும்பிய பின்பு தான் கொள்ளை போன பணம், நகை பற்றிய விபரங்கள் தெரியவரும்.