search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தஞ்சையில் ரே‌ஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌ஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    தஞ்சாவூர்:

    நுகர்பொருள் வாணிப கழக ரே‌‌‌ஷன் கடை பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை, கூட்டுறவுத்துறை ரேசன் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். 4000 பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். ரே‌‌‌ஷன் பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    பணியாளர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீட்டு தொகை, வருங்கால வைப்பு நிதி, கடனுக்கு செலுத்திய தொகை ஆகியவற்றை சரியாக வரவுசெலவு செய்யாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை 903 ரே‌ஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×