search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    தக்காளி விலை குறைந்தது

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.40க்கு விற்ற பெங்களூரு தக்காளி தற்போது ரூ.25 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து சுமார் 350 லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.

    இதுவரை தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வந்தது. இன்று தக்காளி 75 லாரிகளில் வந்து இறங்கி உள்ளது.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை சரிந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.40க்கு விற்ற பெங்களூரு தக்காளி தற்போது ரூ.25 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு தக்காளி மொத்த விலையில் கிலோ ரூ.18-க்கு கிடைக்கிறது.

    வெங்காயம் வரத்து குறைவாகவே உள்ளது. எனவே, தொடர்ந்து கிலோ ரூ.75 க்கு விற்கப்படுகிறது.
    Next Story
    ×