search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெரம்பலூரில் ரூ 2.50 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட ரூ 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் பெரம்பலூர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சவுமியா சுந்தரி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சீனிவாசன், ரத்தினம் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் கடைகளில் விற்பதை கண்டுபிடித்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா 200 கிலோவும் மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் 1,800 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைத்து அளிக்கப்பட்டன.
    Next Story
    ×