search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தேசூர் அருகே பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மாணவன் விபத்தில் பலி

    தேசூர் அருகே பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற 8-ம் வகுப்பு மாணவன் பள்ளி வேன் மோதி இறந்தான்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள நல்லடிசேனை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் விவசாயி. இவரது மகன் வெங்கடேஷ் (13). வலனூர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது சாலையில் வந்த ஒரு வாலிபரின் பைக்கில் லிப்ட் கேட்டு ஏறினார். மஞ்சனூர் ரோடு அருகே வந்தபோது தனியார் பள்ளி வேன் பைக் மீது மோதியது.

    இதில் வெங்கடேஷ் வேன் டயரில் சிக்கி துடிதுடித்து இறந்தார். இதனைக்கண்ட வேன் டிரைவர் மற்றும் மாணவனை பைக்கில் ஏற்றி வந்த வாலிபர் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    தேசூர் போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய வேன் டிரைவர், வாலிபரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×