
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை சென்றாயன் நகர் அக்ரஹாரப்பட்டி ரோட்டைச் சேர்ந்தவர் மகா விஷ்ணு. இவரது மகள் திவ்யா. இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நிலக்கோட்டை பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது எதிரே ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென திவாய் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.
இது பற்றி திவ்யா நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.