search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    96 பேருக்கு பணி நியமன ஆணை- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

    இந்து சமய அறநிலையத்துறையில் 96 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத் துறையில், நிலை 3 செயல் அலுவலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 96 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வாலாஜா ரத்தினகிரி, பாலமுருகன் திருக்கோயிலில் 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம்,

    வலங்கைமான் ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 150 நபர்கள் தங்கும் வகை யில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் கூடம் மற்றும் பீர்க்கன்காரணை, சூராத்தம்மன் திருக்கோயிலில், 64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டில், 500 நபர்கள் கலந்துகொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் 5 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டி வனத்தில் 4 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் பயிற்சியாளர் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    மேலும், 6 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் மற்றும் 9 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலர் அலுவலக வளாகங்கள் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

    Next Story
    ×