search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறி விலை உயர்வு
    X
    காய்கறி விலை உயர்வு

    திண்டுக்கல் மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் உயர்வு

    திண்டுக்கல் மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மேலும் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது. விளைவிக்கப்பட்ட காய்கறிகள் உடனுக்குடன் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் பொதுமக்களும் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. குறிப்பாக கத்தரிக்காய் 1 கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் ரூ.150-க்கும் விற்கப்படுகிறது. கோழிக்கறிக்கு இணையாக காய்கறி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    பீன்ஸ் ரூ.35, வெண்டைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.20, மிளகாய் ரூ.20, தக்காளி ரூ.20, கேரட் ரூ.30 என்ற விலையில் விற்பனையாகிறது. தொடர் மழையினால் உற்பத்தி குறைந்து வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×