search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடியில் திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும் இளைஞர் காங்கிரசார்.
    X
    போடியில் திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும் இளைஞர் காங்கிரசார்.

    திருவள்ளுவர் சிலைக்கு இளைஞர் காங்கிரசார் பாலாபிஷேகம்

    களங்கத்தை துடைப்பதாக திருவள்ளுவர் சிலைக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் அரசியலுக்குள் சிக்கி திருவள்ளுவரும் படாதபாடுபடுகிறார். தமிழர்கள் பெருமையை உலகம் உள்ளவரை நிலை நிறுத்தி சென்ற தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி பெருமைப்படுத்துகிறார்கள் தமிழர்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் படத்துக்கு காவி உடை கட்டி வலைத்தளத்தில் வெளியான படம் அரசியல் ஆனது.

    தஞ்சாவூரில் உச்சகட்டமாக திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிலையை கழுவி காவி துண்டு, மலர்மாலை, ருத்ராட்ச மாலை அணிவித்து கற்பூர ஆராதனை செய்து மரியாதை செய்தார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத். அவரை போலீசார் கைது செய்தனர்.

    போடியில் நேற்று மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தது. போராட்டம் முடிந்ததும் திடீரென்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன்மவுலானா தலைமையில் இளைஞர் காங்கிரசார் 3 குடங்களில் பால் எடுத்து சென்று அங்கிருந்த திருவள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். அப்போது சந்தனம், குங்குமம் வைத்து வணங்கினர்.

    களங்கப்படுத்தப்பட்ட வள்ளுவரை காங்கிரஸ் புனிதப்படுத்தும் விதமாக அபிஷேகம் செய்யப்பட்டதாக அசன் மவுலானா தெரிவித்தார்.

    காங்கிரசார் அபிஷேகம் செய்த திருவள்ளுவர் சிலை நிரந்தரமாக திருநீறு பட்டை அணிந்த நிலையிலேயே இருக்கிறது.

    Next Story
    ×