search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    ராஜபாளையத்தில் பிளஸ்-2 மாணவருக்கு டெங்கு காய்ச்சல்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    ராஜபாளையத்தில் பிளஸ்-2 மாணவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தீவிர கண்காணிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    கடந்த சில வாரங்களாக இவருக்கு அடிக்கடி விட்டு விட்டு காய்ச்சல் வந்தது. பெற்றோர் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை.

    இதையடுத்து ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற கணேஷ்குமாரை, டாக்டர்கள் பரிசோதித்தனர். அவரது ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்த போது டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    தலைமை மருத்துவர் பாபுஜி தலைமையிலான மருத்துவக்குழுவினர், கணேஷ்குமாருக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கிழவிக்குளம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளாலும் வெளியேறும் கழிவு நீராலும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக அந்தப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.

    எனவே சுகாதாரத்துறையினர் கிழவிக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஆய்வு செய்து டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×