search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    வைகை அணை தண்ணீர் திறப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கைகள் வந்தன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 26.11.2019 முதல் 2.12.2019 வரை 240 மில்லியன் கனஅடி தண்ணீரை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

    மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்
    Next Story
    ×