search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.
    X
    மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் அருகே ஆட்குறைப்பை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

    திண்டுக்கல் அருகே ஆட்குறைப்பை கண்டித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே என்.பஞ்சம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஆட்குறைப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தினசரி சம்பளமாக ரூ.200-ல் இருந்து ரூ.150 ஆக குறைக்கப்பட்டதாகவும், பெண்கள் குற்றம் சாட்டினர்.

    இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து ஆட்குறைப்பு செய்ய மாட்டோம், சம்பளத்தை குறைக்க மாட்டோம் என்று உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×