search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓபிஎஸ்-இபிஎஸ்
    X
    ஓபிஎஸ்-இபிஎஸ்

    அமெரிக்கா செல்லும் முதல்வர் ஓபிஎஸ்க்கு முதல்வர் பழனிசாமி நேரில் வாழ்த்து

    அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னை திரும்பினார். 

    இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 10 நாள் அரசு முறைப்பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார்.

    இந்நிலையில், அமெரிக்கா செல்ல இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்றார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    Next Story
    ×