search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா விமானம்
    X
    ஏர் இந்தியா விமானம்

    விமானத்தின் கழிப்பறையில் வைத்து கடத்தி வந்த ரூ.2.24 கோடி தங்கம் - சென்னையில் சிக்கியது

    துபாயில் இருந்து வந்த விமானத்தின் கழிப்பறையில் வைத்து கடத்தப்பட்ட 5.6 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர்.
    சென்னை:

    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் தங்கத்தின் உள்நாட்டு விலைமதிப்பின் மீது மத்திய அரசு 11.85 சதவீதம் சுங்கவரியும் 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் விதித்து வருகின்றது.

    அவ்வகையில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து 100 கிராம் தங்கம் அல்லது தங்க நகைகளை கொண்டு வந்தால் இன்றைய மதிப்புக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் ஆகிறது. இந்த 4 லட்சத்தின் மீது 11.85 சதவீதம் சுங்கவரியும் 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து 16.85 சதவீதம் (சுமார் 75 ஆயிரம் ரூபாய்) வரியாக செலுத்த வேண்டும்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் பலர் இதற்கு பயந்து கள்ளத்தனமாக தங்கத்தை பதுக்கி கடத்தி வருகின்றனர். இப்படி நாளுக்குநாள் கடத்தல் அதிகமாகி வரும் நிலயில் இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், துபாயில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    பிடிபட்ட தங்கம்

    இதையடுத்து, சென்னயில் நேற்று தரையிறங்கிய அந்த விமானத்தை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். அப்போது எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையால் அந்த விமானம் டெல்லி செல்வதில் தாமதம் ஏற்படுவதை கண்டு சில பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.

    தீவிர சோதனைக்கு பின்னர் அந்த விமானத்தின் பின்புற கழிப்பறைக்குள் கருப்பு நிற டேப்பினால் சுற்றப்பட்ட ஒரு பாக்கெட் கிடப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை எடுத்து பிரித்துப் பார்த்ததில் உள்ளே 5.6 கிலோ எடைகொண்ட தங்கக்கட்டிகள் இருந்தன.

    யாரும் உரிமை கோராத அந்த கடத்தல் தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் அதன் உள்நாட்டு விலைமதிப்பு சுமார் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×