
கமுதி:
கமுதி அருகே உள்ள கீழராமநதியைச் சேர்ந்த பாண்டி மகன் துரைப்பாண்டி (வயது 30). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் போஸ் ஆகியோருக்கும் நிலத்தகராறு உள்ளது.
இந்த முன் விரோதத்தில் அய்யனார், போஸ் ஆகியோர் வீடு புகுந்து தன்னையும், மனைவி ராஜேஸ்வரியையும் தாக்கியதாக கமுதி போலீசில் துரைப்பாண்டி புகார் கொடுத்தார்.
மேலும் காயமடைந்த துரைப்பாண்டி கமுதி அரசு மருத்துவமனையிலும், ராஜேஸ்வரி அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் மற்றும் போசை தேடி வருகின்றனர்.