search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கைது
    X
    மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கைது

    சாலை மறியலுக்கு முயன்ற மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கைது

    திண்டுக்கல்லில் மின் வாரிய அலுவலகம் முன்பு சாலை மறியலுக்கு முயன்ற ஒப்பந்த தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மின் வாரிய அலுவலகம் முன்பு சாலை மறியலுக்கு முயன்ற ஒப்பந்த தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருந்தும் அவை நிரப்பப்படவில்லை. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படுமா? என 12 ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை உள்ளது.

    களப்பணியாளர்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் நிரந்தர பணியாளர்கள் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் இரவு பகல் பாராமல், மின் விபத்துகளையும் பொருட்படுத்தாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    எனவே நடைமுறையில் இல்லாத கேங் மேன் பணிக்காக நீதிமன்ற வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் மதிக்காமல் அவசர அவசரமாக கேங் மேன் தேர்வுக்கான பணிகளை மேற்கொள்வதை கண்டித்தும் மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்த தினக்கூலி ரூ.380 கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் இன்று மேற்கு மீனாட்சிநாயக்கன் பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    மாவட்ட தலைவர் காஜாமைதீன் தலைமையில் செயலாளர் முருகானந்தம், பொருளாளர் செல்வம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு திரண்டனர். இதனையடுத்து அங்கு திரண்ட போலீசார் அவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அதனையும் மீறி சாலை மறியலுக்கு முயன்றதால் தாடிக்கொம்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    8,400 குடும்பங்களின் குடி உரிமையை அரசிடம் ஒப்படைக்கும் சூழ்நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம் என ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×