search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    பெரிய வெங்காயம் ரூ.75-க்கு விற்பனை

    அயனாவரம் கடைகளில் பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.75-க்கும், சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) 1 கிலோ ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
    சென்னை:

    வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெங்காயம் விளைச்சல் இருந்தாலும் அது போதுமானதாக இல்லாததால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்படுகிறது.

    இதில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து கிடைக்கும் வெங்காயம் பெரிய அளவில் பளபளப்பாக காணப்படுவதால் இது முதல் ரகமாக கருதப்படுகிறது.

    ஆந்திராவில் இருந்து கிடைக்கும் வெங்காயம் சுமாரான அளவில் சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் இதன் விலை குறைவாக இருக்கும். ஆனால் இதை பலர் வாங்க விரும்பவதில்லை.

    தற்போது வெளி மாநிலங்களில் வெங்காய சாகுபடி மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து விட்டது. தமிழகத்தில் 1 கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையானது.

    வெங்காய விலையை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம் வெளி சந்தைக்கு எடுத்து வரப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது.

    ஆனாலும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் வெங்காயம் வரத்து குறைவாகவே உள்ளது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக தினமும் 70 லாரிகளில் வெங்காயம் வரும். ஆனால் இப்போது 40 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வருகிறது. இதனால் வெங்காயம் விலை உயர்ந்து விட்டது.

    சென்னை கோயம்பேட்டில் பெரிய வெங்காயம் நேற்று 1 கிலோ ரூ.65-க்கு விற்கப்பட்டது. இன்று 5 ரூபாய் குறைந்து ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதை வாங்கி விற்கும் சில்லரை கடைக்காரர்கள் கிலோவுக்கு 10 ரூபாய், 15 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்வார்கள்.

    அதன்படி அயனாவரம் கடைகளில் பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.75-க்கு விற்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில் உள்ள ஆந்திர வெங்காயத்தை 50 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

    கோயம்பேட்டில் சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) 1 கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. அயனாவரம் கடைகளில் ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்கிறார்கள்.

    அயனாவரத்தில் விற்கப்படும் காய்கறி விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

    கேரட் - ரூ. 90
    அவரை - ரூ.90
    பீன்ஸ் - ரூ.70
    கத்தரிக்காய் - ரூ.80
    கொத்தவரங்காய் - ரூ.60
    பீட்ரூட் - ரூ.60
    சவ்சவ் - ரூ.40
    தக்காளி - ரூ.40
    உருளைக்கிழங்கு - ரூ.40
    சேனை - ரூ.40
    கோஸ் - ரூ.30

    Next Story
    ×