search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்.
    X
    குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் தர்ணா போராட்டம்

    குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம், சிவதாபுரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். தறிதொழிலாளி. இவருடைய மனைவி மைதிலி. இவர்களது மகன் ஹரிகுகன் (வயது 4).

    கடந்த செப்டம்பர் மாதம் இவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டு சேர்க்கப்பட்டான். இங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில் ஹரி குகனுக்கு மூளைக்காய்ச்சல் தாக்கி இருந்தது தெரியவந்தது.

    மேலும் அவன், கோமா நிலைக்கு சென்று விட்டான். இதையடுத்து பெற்றோர், அவனை கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நிறைய மருத்துவ செலவுகளும் ஏற்பட்டது. அங்கிருந்த டாக்டர்கள், அவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தனர்.

    பின்னர் ஹரிகுகனை பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்தனர். ஆனால் அவனுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வேதனை அடைந்த மணிவண்ணன்- மைதிலியும் தனது மகனுடன் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் ஏற்பட்டது.

    பின்னர் சிறுவன் ஹரிகுகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு தொடர்ந்து அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×