
விருதுநகர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பரமேசுவரி (வயது23). இவருக்கும் விஸ்வநத்தம் காளிராஜ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பரமேசுவரி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று காளிராஜ் மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு பரமேசுவரியின் தம்பி சதீஷ்குமார் (22) இருந்தார். அவரிடம் உன்அக்காவை என்னுடன் அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து ஆமத்தூர் போலீசில், சதீஷ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காளிராஜை கைது செய்தனர்.