search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆரணி அருகே மயான பாதை இல்லாததால் வயலில் இறங்கி பிணத்தை கொண்டு செல்லும் அவலம்

    ஆரணி அருகே இறந்தவர்களின் பிணத்தை மயான பகுதிக்கு கொண்டு செல்ல வழியின்றி வயலில் இறங்கி எடுத்து செல்லும் அவல நிலை உள்ளது.
    ஆரணி:

    ஆரணி அடுத்த வடாமதிமங்கலம் அருகே உள்ள ஆலபூண்டி கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    ஆலபூண்டி கிராமத்து பொதுமக்களுக்கு மயானம் சுமார் 75 செண்டு அளவில் உள்ளன. ஆனால் மயான செல்லும் பாதை கடந்த 3தலைமுறைகளாக அதாவது 100ஆண்டுக்கு மேலாக மயானம் செல்ல பாதையின்றி தவிக்கின்றனர்.

    மேலும் ஆலபூண்டி கிராமத்தில் இறந்தவர்களின் பிணத்தை மயான பகுதிக்கு கொண்டு செல்ல வழியின்றி தாங்கள் செய்யும் விவசாய நிலத்தை சேதபடுத்தி கால்களால் மிதித்து பிணத்தை கொண்டு செல்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஆலன்பூண்டி கிராமத்தை சேர்ந்த சாரதம்மாள்(75) உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

    சாரதம்மாளின் சடலத்தை உறவினர்கள் மற்றும் கிராமத்து பொதுமக்கள் மயான பாதையின்றி வயல் வெளியில் பயிர்களை மிதித்து சேதபடுத்தி பிணத்தை சிரமத்துடன் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

    மழை காலங்களில் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல மிகவும் சிரமத்துடன் இருப்பதாகவும் சடலத்தை சுமந்து செல்பவர்கள் காயத்தில் சிக்குவதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல மயானபாதையை அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×