search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏடிஎம்.மில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டு.
    X
    ஏடிஎம்.மில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டு.

    திண்டுக்கல் ஏ.டி.எம்.களில் வரும் கிழிந்த ரூபாய் நோட்டுகள்- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

    திண்டுக்கல் ஏ.டிஎம்.களில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாகவே ஏ.டி.எம்.கள் பரபரப்பாக செயல்பட்டன. தீபாவளி பண்டிகை என்பதால் பொதுமக்கள் ஏ.டி.எம்.களில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர். சில ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பியவுடன் காலியான நிலையும் ஏற்பட்டது.

    இந்நிலையில் வடக்கு ரத வீதியில் உள்ள கனரா பேங்க் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த வாடிக்கையாளருக்கு 100 ரூபாய் கிழிந்த நோட்டு வந்தது. கந்தல் கந்தலாக வந்த நோட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்கள் முறையான பதில் அளிக்க வில்லை.

    நகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக 500, 2000 போன்ற உயர் மதிப்பு நோட்டுகள் கிழிந்த நிலையில் வரும் போது அதனை மாற்ற முடியாமல் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர்.

    குறைந்த அளவே இருப்பு வைத்துக் கொண்டு அவசர தேவைக்கு பணம் எடுக்கும் போது இது போன்ற கிழிந்த நோட்டுகள் வந்தால் வாடிக்கையாளருக்கு இக்கட்டான நிலை உருவாகி விடுகிறது. பொதுவாக வங்கியில் பணம் டெபாசிட் செய்யும் போதும், ஏ.டி.எம்.களில் பணம் செலுத்தும் போதும் அழுக்கு மற்றும் கிழிந்த நிலையில் இருக்கும் நோட்டுகளை வாங்க மறுக்கின்றனர். ஆனால் ஏ.டி.எம்.களில் இருந்து மட்டும் இது போன்ற கிழிந்த நோட்டுகள் வருவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×