search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்பு துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்ட காட்சி
    X
    ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்பு துறை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்ட காட்சி

    பெரம்பலூரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா

    பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நோட்டீஸ் ஓட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்(பொறுப்பு) ராஜேந்திரன் தலைமையில் அரசு அலுவலர்கள் ஊழல் தடுப்பது குறித்த உறுதி மொழி எடுத்தனர். அதில் பொது வாழ்க்கையில் நேர்மையை ஊக்குவிப்பது, லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. எல்லா ஊழியர்களும் ஒழுக்க நெறிமுறை கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

    பின்னர் பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்கள் பார்வைக்காக கலெக்டர் அலுவலகங்களில் பல இடங்களில் ஒட்டப்பட்டது.

    இந்த விழிப்புணர்வு நோட்டீசில் "நேர்மை நமது வாழ்வின் வழிமுறை, ஊழலற்ற வாழ்வே உயர்வுக்கு வழி" என்ற வாசகங்களும், லஞ்சம் குறித்து 94981 10576 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவள்ளி, சுலோச்சனா, ஏட்டு மனோகரன் உட்பட போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×