search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளப்பள்ளி ஊராட்சியில், பயன்பாடற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணறு மூடப்படும் காட்சி.
    X
    கள்ளப்பள்ளி ஊராட்சியில், பயன்பாடற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணறு மூடப்படும் காட்சி.

    பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு மூடப்பட்டது - அதிகாரிகள் நடவடிக்கை

    கள்ளப்பள்ளி ஊராட்சியில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு மூடப்பட்டது.
    லாலாபேட்டை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அதனை உடனடியாக மூட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தநிலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளப்பள்ளி ஊராட்சியில் பொதுமக்களின் நலன் கருதி கைபம்பு அமைக்கப்பட்டது. அதில் தண்ணீர் வராததால் நாளடைவில் அப்படியே விடப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த ஆழ்துளை கிணறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து அறிந்ததும் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் ஒன்றிய ஆணையர் புவனேஸ்வரி தலைமையில் அதிகாரிகள், அந்த பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றினை பார்வை யிட்டனர். பிறகு அதில் மூடி போட்டு மூடினர்.

    இதேபோல, வேறு எங்காவது ஆழ்துளை கிணறு ஆபத்தான நிலையில் இருக்கிறதா? என அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 
    Next Story
    ×