search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதவி கலெக்டர் பிரதாப்
    X
    உதவி கலெக்டர் பிரதாப்

    ஆழ்துளை கிணறுகளை மூடிவைக்க வேண்டும்- உதவி கலெக்டர் வேண்டுகோள்

    பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று உதவி கலெக்டர் பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மொரப்பூர்:

    அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரூர் கோட்டத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூடுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சப்- கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆழ்துளை கிணறு தோண்டும் நிலத்தின் உரிமையாளர் 15 நாட்களுக்கு முன்பாக சம்மந்தப்பட்ட நபரிடம் எழுத்து பூர்வமான தகவல் தெரிவிக்கப்பட வேண்டும், போர்வெல் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும், அமைக்கப்பட்ட போர் வெல்கள் பாதுகாப்புடன் மூடி போட்டு வைக்கப்பட வேண்டும், போர் போடும் போது வெளியேறும் சேறு உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற வேண்டும், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் உடனடியாக மூட வேண்டும், அதற்கான அறிக்கையை அனுப்ப வேண்டும், தனியார் நிலங்களில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத போர்வெல் குழாய்கள் முடப்படவில்லை எனில் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    இதில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் வட்டாட்சியர்கள் செல்வகுமார், இளஞ்செழியன், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோட்டத்தில் உள்ள செயல் அலுவலர்கள், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரமேஸ்வரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×