search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூலித்தொழிலாளி உயிரிழப்பு
    X
    கூலித்தொழிலாளி உயிரிழப்பு

    போச்சம்பள்ளி அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு

    போச்சம்பள்ளி அருகே தென்னை ஓலைகளை பார்வையிட சென்ற கூலித்தொழிலாளியை மலைத்தேனீக்கள் கொட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    போச்சம்பள்ளி

    போச்சம்பள்ளி அடுத்த முருகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது60). விவசாய கூலித்தொழிலாளியான இவர் விவசாய நிலங்களில் உள்ள தென்னை ஓலைகளை விலைக்கு வாங்கி துடப்பம் தயாரித்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் சம்பவத்தன்று விவசாய நிலத்திற்கு சென்று தென்னை ஓலைகளை வாங்க பார்வையிட சென்றார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த மலைத்தேனீக்கள் திடீரென முருகனை தாக்கியது. 

    இதில நிலைத்தடுமாறிய முருகன் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போதும் தேனீக்கள் தொடர்ந்து கொட்டியதில் முகம் மற்றும் உடம்பின் பல பகுதிகளில் கொட்டியது. இந்த நிலையில், தேனீக்களின் கடியிலிருந்து தப்பிக்க அருகே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் சேமிப்பு தொட்டியில் முருகன் குதித்தார். 

    அதற்குள்ளாக உடம்பில் விஷம் ஏறிய நிலையில் மயக்கமடைந்து முருகன் தண்ணீர் தொட்டியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் முருகன் தேனீக்கள் கொட்டியதால் இறந்து கிடப்பதை கண்டு போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்ததனர். அதன் பேரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×