search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்.
    X
    முக ஸ்டாலின்.

    முதல்வர் பழனிசாமி கோபத்தை தவிர்ப்பாராக- முக ஸ்டாலின் அறிக்கை

    சிறுவன் சுர்ஜித் உயிரிழந்தது குறித்து எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். எனது ஆதங்கத்தை முதல்வரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று முகஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    திருச்சி:

    மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க 5 நாட்களாக மீட்புக் குழுவினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. 

    இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சுஜித் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
     
    இதற்கிடையே ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அப்போது பேசிய அவர்

    சுஜித் மீட்புப்பணி குறித்து அரசை ஸ்டாலின் குறை கூறுவது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்றார்.
    செய்தியாளர் சந்திப்பில் இபிஎஸ், ஓபிஎஸ்
    இந்நிலையில் முதல்வர் பழனிசாமி பேசியதற்கு முக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுவன் சுர்ஜித் உயிரிழந்தது குறித்து எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். எனது ஆதங்கத்தை முதல்வரால் புரிந்துகொள்ள முடியவில்லை கோபப்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×