search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காலாவதியான ஐஸ் விற்பனை - வியாபாரிகள் 2 பேர் கைது

    திருப்பூரில் காலாவதியான ஐஸ்களை விற்பனை செய்த வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த ஜெகதீஷ். இவருக்கு சொந்தமான ஐஸ் கம்பெனி காங்கயம் சாலையில் உள்ளது. கம்பெனியில் வேலை செய்த ராமச்சந்திரன் மற்றும் மயில்சாமி ஆகியோர் டூம் லைட் பகுதியில் தள்ளு வண்டியில் ஜஸ் விற்பனையில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் இந்த ஐஸ்சை வாங்கி சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி ஐஸ் கடையை சுற்றி வளைத்து, தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டிக்குள் இருந்த ஐஸ்களை பார்த்தபோது அவை அனைத்தும் காலாவதியான ஐஸ் என்பதும், பெரும்பாலான ஜஸ்களில் துர்நாற்றம் வீசுவதுமாக இருந்தது.

    இதனையடுத்து விற்னையில் ஈடுபட்ட ராமச்சந்திரன், மயில்சாமி ஆகியோரை ஐஸ்வண்டிகளுடன் பிடித்து திருப்பூர் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஐஸ்களை பரிசோதனைக்கான ஆய்வு கூடத்திற்கு அனுப்புவதாகவும், காலாவதி ஐஸ்கள் என ஆய்வில் முடிவு செய்யப்பட்டால் நிறுவன உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×