search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஜித் குடும்பத்தினருக்கு முக ஸ்டாலின் நேரில் ஆறுதல்
    X
    சுஜித் குடும்பத்தினருக்கு முக ஸ்டாலின் நேரில் ஆறுதல்

    ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சுஜித் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

    ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    திருச்சி:

    ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறந்த குழந்தை சுஜித்தின் குடும்பத்தினரை அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சுஜித்தின் இறப்பு குறித்து அறிந்ததும் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு வந்தார். திருச்சியில் இருந்து கார் மூலம் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்றார். அங்கு சுஜித்தின் பெற்றோர் ஆரோக்கியராஜ்- கமலாமேரி மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சுஜித்தின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


     
    மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

    அதன்பிறகு மு.க.ஸ்டாலின் சுஜித் விழுந்து இறந்த ஆழ்துளை கிணறு பகுதியை பார்வையிட்டார். அந்த குழிகள் தற்போது கலெக்டர் சிவராசு உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலினிடம் ஆழ்துளை கிணறு அமைந்த இடம், சுஜித் விழுந்த சம்பவம், நடந்த மீட்புப்பணிகள், பாறைகளால் மீட்புப்பணிகளில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு சிக்கல்கள் குறித்து அங்கிருந்தவர்கள் விளக்கி கூறினர்.

    அதேப்போன்று சுஜித்தின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் விமலின் சொந்த ஊர் மணப்பாறை. அவர் சுஜித் கிணற்றுக்குள் விழுந்த தகவல் அறிந்ததும், மணப்பாறை வந்து மீட்புப்பணியை பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் கூறியிருந்தார். நம்பிக்கையுடன் சுஜித் மீண்டு வருவான் என்று பெற்றோருக்கு ஆறுதல் கூறி சென்றிருந்தார்.

    இந்த நிலையில் சுஜித் இறந்த தகவல் அறிந்ததும் இன்று காலை நேரில் வந்து உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, கரூர் எம்.பி., ஜோதிமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், கலெக்டர் சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உள்ளிட்டோரும் அனைத்து மத பிரமுகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×