search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்கள்
    X
    மீன்கள்

    அமாவாசை-மகாவீர் தினம்: மட்டன்-சிக்கன், மீன் விற்பனை பாதிக்கும்

    தீபாவளி அமாவாசையோடு வருவதாலும், மறுநாள் மகாவீர் தினம் வருவதாலும் இறைச்சி வியாபாரம் பாதிக்கும் என்று வியாபாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளில் அசைவ உணவை விரும்புபவர்கள் ஆடு, கோழி, மீன் வாங்கி சமைத்து பூஜையில் வைத்து படைப்பார்கள்.

    இந்த வருடம் தீபாவளி பண்டிகை முழு அமாவாசை தினத்தில் வருவதால் பெரும்பாலானவர்கள் அசைவ உணவை சமைக்க மாட்டார்கள்.

    தீபாவளிக்கு மறுநாள் 28-ந் தேதி மகாவீர் தினம் வருவதால் அனைத்து இறைச்சி கடைகளும் மூடப் பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    அதனால் 2 நாட்கள் மட்டன், சிக்கன் மற்றும் மீன் விற்பனை கடுமையாக பாதிக்கும்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த கோழிக்கறி விற்பனையாளர் முகமது உசேன் கூறியதாவது:-

    பொதுவாக தீபாவளிக்கு முதல் நாள் இரவே ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்ய தொடங்கி விடுவோம். இந்த தீபாவளி அமாவாசையோடு வருவதால் வியாபாரம் பாதிக்கக்கூடும்.

    நிறைய பேர் அமாவாசை தினத்தில் அசைவ உணவை ஏற்கமாட்டார்கள். அதனால் வியாபாரம் மந்தமாக இருக்கும்.

    மறுநாள் (28-ந்தேதி) மகாவீர் தினம் வருவதால் அன்று இறைச்சி கடைகள் மூடப்படுகிறது. இதனால் வியாபாரம் பாதிக்கும். மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று பொதுவாக அசைவ உணவை தவிர்ப்பார்கள். அதனால் புதன்கிழமை அன்று இறைச்சி வியாபாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    புரட்டாசி மாதத்தில் இறைச்சி வியாபாரம் கடுமையாக பாதித்தது. இப்போது தீபாவளி பண்டிகை வியாபாரமும் பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×