search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீர்ப்பு
    X
    தீர்ப்பு

    கார் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்த டிரைவரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்

    கார் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்த டிரைவரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் கலாநிதி(வயது 29). டிரைவரான இவர் சொந்தமாக கார் வாங்க தாட்கோ மூலம் கடன் கேட்டு, லாடபுரம் கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீதான நிலைகுறித்து, தாட்கோ மேலாளருக்கு தகவல் தெரிவிக்காமலும், கடன் வழங்காமலும் 4 மாதமாக வங்கி அதிகாரிகள் கலாநிதியை அலைக்கழித்துள்ளனர்.

    இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கலாநிதி, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இழப்பீடு பெற்று தரக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. கடன் வழங்காமல் அலைக்கழித்த சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ.75 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவு ரூ.15 ஆயிரம் என ரூ.90 ஆயிரத்தை 2 மாதத்திற்குள் கலாநிதிக்கு வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தர்மர் தீர்ப்பளித்தார்.

    மேலும், கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கியின் மேலாளர் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
    Next Story
    ×