search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    புதுவை அருகே பள்ளியில் தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

    புதுவை அருகே பள்ளியில் தலைமை ஆசிரியரை மாணவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே திருச் சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காந்தி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளி தலைமை ஆசிரியராக அப்பகுதியை சேர்ந்த ஜெயராமன் (வயது 53) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இதற்கிடையே அப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் தொடர்ந்து ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டு வந்தார். பல முறை மாணவரை அழைத்து தலைமை ஆசிரியர் ஜெயராமன் கண்டித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அந்த மாணவர் திருந்தவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மாணவர் மீண்டும் சேட்டையில் ஈடுபடவே அந்த மாணவரை தலைமை ஆசிரியர் ஜெயராமன் அழைத்து கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர் கையில் வைத்திருந்த புத்தகத்தால் தலைமை ஆசிரியர் ஜெயராமன் முகத்தில் ஓங்கி குத்தினார். இதில் அவருக்கு மூக்கு, உதடுகளில் படுகாயம் ஏற் பட்டது.

    மேலும் காது வழியே ரத்தம் வந்தது. இதனால் தலைமை ஆசிரியர் ஜெயராமன் மயங்கி சாய்ந்தார். இதனை பார்த்ததும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மயங்கி சாய்ந்த தலைமை ஆசிரியர் ஜெயராமனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த தகவலின் பேரில் ஆரோவில் போலீசார் சம்பந்தப்பட்ட மாணவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலைமை ஆசிரியரை மாணவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவனின் தம்பி இதே போன்று ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால் 15 நாள் சஸ்பெண்டு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×