search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    முக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியானது - ஜெயக்குமார்

    தமிழக இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில் முக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதை அடுத்து அக்கட்சி தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். மகளிர் அணி நிர்வாகிகள் உற்சாகமாக நடனம் ஆடி வெற்றியை கொண்டாடினர்.

    அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இடைத்தேர்தல் வெற்றி குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    2 தொகுதியிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதிலும் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக்கூடிய நிலை உருவாகி இருப்பதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    முக ஸ்டாலின்

    தமிழக மக்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வை மதவாத இயக்கம், ஜாதியவாத இயக்கம் என்று அம்மாவின் அரசை குறை கூறினார்.

    இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மக்கள் தவிடுபொடியாக்கி விட்டனர். வடக்கிலும் வெற்றி, தெற்கிலும் வெற்றி.இதனை பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் அரசு அமையும் என்பதை காட்டுகிறது. அந்த நம்பிக்கையை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான இந்த ஆட்சிக்கு கிடைத்துள்ள நற்சான்று இது.

    இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடந்த போட்டி. இதில் தர்மம் வென்றது. அதர்மம் தோல்வி அடைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்போம். மீண்டும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். வடக்கும் தெற்கும் ஆதரவு கொடுத்து இருப்பதன் மூலம் மீண்டும் அம்மாவின் ஆட்சி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×