search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை படத்தில் காணலாம்.
    X
    அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை படத்தில் காணலாம்.

    ராயக்கோட்டை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்கள் கைது

    ராயக்கோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 வாலிபர்ககை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை:

    தர்மபுரி மாவட்டம் பாலக் கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி எல்லப்பன்பாறை கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). அதே பகுதியைச் சேர்ந்த திம்மராயன் (20) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று நம்மாண்ட அள்ளி வழியாக ராயக்கோட்டை வனப்பகுதிக்கு நாட்டு துப்பாக்கியை எடுத்து சென்றனர். 

    நேற்று காலை ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மன அள்ளி ஊராட்சியை அடுத்த எடவனஅள்ளி கிராமத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி சாக்கப்பனை மர்ம கும்பல் வெட்டி கொன்றது. அவர்களை தேடி உறவினர்கள் ராயக் கோட்டை பகுதி முழுவதும் சுற்றி திரிந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக நாட்டு துப்பாக்கியுடன் வந்த கணேசன் மற்றும் திம்மராயனை அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். 

    பிடிபட்ட 2 பேரையும் கொலையாளிகளாக இருப்பார்கள் என்று எண்ணி ராயக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியுடன் ராயக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், நாட்டு துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
    Next Story
    ×