search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை படத்தில் காணலாம்.
    X
    சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை படத்தில் காணலாம்.

    அதிராம்பட்டினம் அருகே தொடர் மழையால் சாலையில் திடீர் பள்ளம்

    அதிராம்பட்டினம் அருகே தொடர் மழையால் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள தொக்காலிக்காடு கிராமம். இந்த கிராமத்தில் தொக்காலிக்காடு கீழக்காடு முத்து மாரியம்மன் கோவில் தெரு பகுதிக்கு செல்லும் சாலை கடந்த ஒரு மாதமாக பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் அந்த சாலை தற்போது முற்றிலும் இடிந்து ஒரு மிகப் பெரிய பள்ளத்தாக்கு போல் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவியர்கள் 1 1/2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு உரம் உள்ளிட்ட மற்ற பொருட்களை கொண்டு செல்ல இரண்டு 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்துதான் செல்ல வேண்டி உள்ளது. 

    இதுபற்றி அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் கூறுகையில், இந்த சாலை கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்து இருந்தது. இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் சாலை முற்றிலுமாக இடிந்து மிகப் பெரிய பள்ளமாக ஆகிவிட்டது. தற்போது ஆட்கள் நடந்து செல்லும் அளவிற்குத்தான் இந்த சாலை உள்ளது. 

    இருசக்கர வாகனங்கள் மிக கஷ்டப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சிறிது தாமதித்தாலும் இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் பகுதியில் நேற்று ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே சாலை வசதியில்லாததால் அவரை தாமதமாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால் அந்த உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. எங்கள் கிராமம் ஒரு துண்டிக்கப்பட்ட கிராமமாகவே அதாவது ஒரு தனித்தீவை போலவே தற்போது உள்ளது. எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×