search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென் மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

    மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் தென் மாவட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    நெல்லை:

    மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்.56319) இன்று மற்றும் வருகிற 30-ந்தேதி ஆகிய நாட்களில் கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் கோவை -நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56320) இன்றும், வருகிற 25-ந்தேதி, 29-ந்தேதி மற்றும் 30-ந் தேதிகளில் திண்டுக்கல்-கோவில்பட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்கள் கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் இருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு செல்லும்.

    இதேபோல் பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56769) வருகிற 30-ந்தேதி விருதுநகர்-நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. வருகிற 25, 29-ந்தேதிகளில் மதுரை-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-பாலக்காடு பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56770) வருகிற 30-ந் தேதி நெல்லை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. வருகிற 25, 29-ந் தேதிகளில் நெல்லை-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

    செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரெயில் இன்றும் மற்றும் வருகிற 25-ந்தேதியும் விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 5 மணிக்கு செங்கோட்டை புறப்படும் பாசஞ்சர் ரெயில் இன்றும், வருகிற 25-ந் தேதியும் மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்படும்.

    சென்னையில் இருந்து குருவாயூர் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) இன்று, 25-ந்தேதி, 29-ந் தேதி மற்றும் 30-ந் தேதிகளில் வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களுக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றடையும். இந்த ரெயிலுடன் இணைக்கப்படும் தூத்துக்குடி இணைப்பு ரெயில் (வ.எண்.16129) மேற்கண்ட நாட்களில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடையும். இந்த தகவல் மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×