search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஐகோர்ட்டு
    X
    மதுரை ஐகோர்ட்டு

    தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமி மகன் தேடப்படும் குற்றவாளி- மதுரை ஐகோர்ட்டு அறிவிப்பு

    தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமி மகனை தேடப்படும் குற்றவாளியாக மதுரை கோர்ட்டு அறிவித்துள்ளது.

    மதுரை:

    மதுரை காமராஜர்புரம் என்.எம்.ஆர். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.ஜி.மணி (வயது 36). இவர் தி.மு.க. பிரமுகரும், மதுரை மண்டலக்குழு முன்னாள் தலைவருமான வி.கே.குருசாமியின் மகன் ஆவார்.

    கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் வி.கே.ஜி. மணி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக அவர் மதுரை குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

    இந்த நிலையில் வி.கே.ஜி.மணி கடந்த சில மாதங்களாக வழக்கு விசாரணையின் போது ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

    மதுரை தி.மு.க. பிரமுகர் வி.கே. குருசாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் வி.கே.ஜி. மணியை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

    Next Story
    ×