search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்க கோரி வழக்கு

    சாமி முன்பு உறுதிமொழி எடுக்காத அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில், அத்துறையின் ஆணையர், பிற அதிகாரிகள் பணியில் சேரும் முன், அருகிலுள்ள கோவிலில் தெய்வத்தின் முன் நின்று, இந்து மதத்தில் பிறந்தவர் என்றும், இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுபவர் என்றும் உறுதிமொழி எடுப்பதுடன், உறுதிமொழி படிவத்திலும் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்டப்பிரிவுகளின் படி தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், பிற அதிகாரிகளும் எந்த உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளவில்லை.

    இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. எனவே இந்த அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாரயணன், என்.சேசஷாயி அமர்வு, மனுவுக்கு வருகிற நவம்பர் 28-ந்தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
    Next Story
    ×