search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.ஆர்.தனபாலன்
    X
    என்.ஆர்.தனபாலன்

    டாக்டர் பட்டம் பெற்ற முதல்-அமைச்சருக்கு என்.ஆர்.தனபாலன் வாழ்த்து

    டாக்டர் பட்டம் பெற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொய்வின்றி வழங்கி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகள் மகத்தானது. மாணவ-மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது சாலச் சிறந்ததாகும்.

    சிறந்த நிர்வாகியாகவும், தமிழக வளர்ச்சிக்கு பாடுபடும் சிந்தனையாளராகவும், கல்வி வளர்ச்சிக்கு துணை நிற்கும் அரணாகவும் செயல்படும் முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமை சேர்த்த டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அதன் வேந்தர் ஏ.சி.சண்முகத்திற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×