search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்திய காட்சி.

    திருக்கனூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம்

    திருக்கனூர் அருகே இன்று காலை சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே குமராப்பாளையம் மற்றும் தேத்தாம்பாக்கம்- காட்டேரிக்குப்பம் இடையே உள்ள அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சொட்டு நீலம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். 

    மேலும் இச்சாலையை அப்பகுதி விவசாயிகள் விளை நிலங்களுக்கு உரம், எரு உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லவும்,   அதுபோல் விளை நிலங்களில் இருந்து விளைந்த பொருட்களை கொண்டு வரவும் பயன் படுத்தி வருகின்றனர். இதற்கிடையே   இந்த சாலை ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த நிலையில் தற்போது பெய்த தொடர் மழையால் மேலம் சேதமாகி நடந்து செல்லவே   முடியாத நிலையில் சேரும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வரு கின்றனர். 

    இதையடுத்து இந்த சாலையை சீரமைக்க கோரி குமராப்பாளையம் மற்றும் தேத்தாம்பாக்கம் கிராம மக்கள் இன்று காலை ஒன்று திரண்டு சேறும், சகதியுமான அந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் 2 நாட்களுக்குள் இந்த சாலையை சீரமைக்கா விட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
    Next Story
    ×