என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்தங்கரையில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்22 Oct 2019 1:30 PM GMT (Updated: 22 Oct 2019 1:30 PM GMT)
ஊத்தங்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஊத்தங்கரை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த ஹெரிப் (வயது31), ஊத்தங்கரையை சேர்ந்த பழனி மகன் வெங்கடேசன் (26), கல்லாவியை அடுத்துள்ள என்.வெள்ளாளபட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கைதான 3 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
×