search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    கன்னிவாடி அருகே அதிகாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

    கன்னிவாடி நாயோடை நீர்தேக்க குடிமராமத்து பணி சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல லட்சம் முறைகேடு நடப்பதாகக்கூறி கொட்டிய மழையில் அதிகாரியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கன்னிவாடி:

    கன்னிவாடி நாயோடை நீர்தேக்க குடிமராமத்து திட்டத்தில் சீரமைப்பு பணி நடக்கிறது. இந்த திட்டத்தில் முறைகேடு நடப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதனை முழுமையாக முடிக்காமல் பணத்தை திருப்பி அனுப்ப உள்ளதாக தகவல் பரவியது. இப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவான நிலையில் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் கன்னிவாடியில் நேற்று குடிமராமத்து திட்டக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் சுஜாதாவின் காரை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர் சமரசம் செய்தபோதும், விவசாயிகள் உடன்படவில்லை. கொட்டும் மழையில் நடந்த போராட்டாத்தால் பரபரப்பு உருவானது.

    நீர்தேக்கத்தை ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்தல், ஆக்கிரமிப்பு அகற்றம் போன்றவற்றை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோ‌ஷங்கள் எழுப்பினர். அங்கு வந்த கன்னிவாடி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் பங்கேற்கும் வகையிலான உறுப்பினர்களைக்கொண்ட வெளிப்படையான கூட்டம் நடத்துவதாக அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×